Tuesday, October 13, 2009

திரும்பல்

திரை கடலோடி திரவியம் தேடி
நிறைவான போதில் மகிழ்வான திரும்பல் ...
இத்தனை ஆண்டுகள் வாழ்கையின் சுவடுகள்
இனிமை நிறைந்த கானல் நினைவுகள்
புதிதாய் ஒரு வாழ்க்கை செய்ய
பழைய இடத்துக்கு நீண்ட பயணம்...
புதுமையும் பழமையும் அனுபவம் கொடுக்க
பழையதில் புதியதாய் ...
இருக்கும் சில மனதுகள் மட்டும்
இரண்டும் கெட்டான் உணர்வுக்குள் தவிப்பு.