காலம் வெல்லும் காதல் எல்லாம்
கனவாய் மட்டும் கலைந்திட்டாலும்
நினைவின் நிழலில் என்றும் வாழும்
கவிதை வடிவில் உயிராய் மீண்டும்
எத்தனை தூரம் எத்தனை காலம்
எங்கோ ஒதுங்கி மறந்தாற்போல
திரிந்தபோதும் மின்னல் பொழுதில்
நெஞ்சம் நிறைக்கும் சின்ன நினைவில்
கொஞ்சம் போல ஓரம் வந்து
நெஞ்சம் முழுதும் பொங்கி நிறைக்கும்
வந்த பொழுதில் என்னை துரத்தும்
அந்த நினைவை என்ன சொல்ல?
கனவாய் மட்டும் கலைந்திட்டாலும்
நினைவின் நிழலில் என்றும் வாழும்
கவிதை வடிவில் உயிராய் மீண்டும்
எத்தனை தூரம் எத்தனை காலம்
எங்கோ ஒதுங்கி மறந்தாற்போல
திரிந்தபோதும் மின்னல் பொழுதில்
நெஞ்சம் நிறைக்கும் சின்ன நினைவில்
கொஞ்சம் போல ஓரம் வந்து
நெஞ்சம் முழுதும் பொங்கி நிறைக்கும்
வந்த பொழுதில் என்னை துரத்தும்
அந்த நினைவை என்ன சொல்ல?