Wednesday, June 3, 2015

சின்ன மகளே

சின்ன விரலால் நெற்றி தொட்டு
மின்னல் குரலில் நெஞ்சம் தொட்டு
பள்ளி செல்லும் அந்த வேளையில்
துள்ளும் கனவை என்னில் விடும்
சின்ன மகளே-
உன்னில் என்னை  வைத்துப்பார்க்க
உள்ளம் முழுதும் ஏங்கும் போதும்
அந்த எண்ணம் தூக்கி எங்கோ போட
விரைந்து வரும் நனவுக்காலம்-
நானாய் இருந்த காலம் கொஞ்சம்
தானாய் வாழ்க்கை பிடியில்
இறுகி இளகி சிரித்து அழுது
ஓடும் நாட்களில் ஓடும் கனவாய்  வேண்டாம் மகளே
நீயாய் இருந்து
நிஜமாய் நிழலாய் அனலாய் குளிராய்
எல்லா முகமும் நன்றாய் உணர்ந்து
ஓட்டம் நடுவில் அமைதி புரிந்து
சிரிப்பாய் சிறப்பாய் இருப்பாய் மகளே ....